சுடச்சுட

    

    போடி அருகே வெள்ளிக்கிழமை அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதியதில் கூலித்தொழிலாளி உயிரிழந்தார். பள்ளிக் குழந்தைகள் உள்பட 4 பேர்  காயமடைந்தனர்.

     தேனி அருகே பூதிப்புரம்-மஞ்சிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் முருகன் (46). கூலித் தொழிலாளி. இவரும், கெப்புரெங்கன்பட்டியை சேர்ந்த வெள்ளையப்பன் மகன் ராஜாமணி (52) என்பவரும் போடிக்கு அரசு பேருந்தில் சென்றனர்.

      போடி மீ.விலக்கு அருகே அரசு பேருந்து வந்தபோது, போடியிலிருந்து மதுரை சென்ற தனியார் பேருந்து அதை முந்தும்போது அரசு பேருந்தின் பின்பக்கம் மோதியது. இதில் முருகன், ராஜாமணி, பள்ளிக் குழந்தைகள் கண்மணி, சர்மிளா, வசந்த் ஆகியோர் காயமடைந்தனர்.

     பலத்த காயமடைந்த முருகன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ராஜாமணி போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி குழந்தைகள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

     இந்த விபத்து குறித்து போடி புறநகர் காவல் நிலைய போலீஸார் தனியார் பேருந்து ஓட்டுநர் சந்திரன் (37) மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai