Enable Javscript for better performance
மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணம்: ஆட்சியர் வழங்கினார்- Dinamani

சுடச்சுட

    

    மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணம்: ஆட்சியர் வழங்கினார்

    By தேனி  |   Published on : 18th April 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனியில் வெள்ளிக்கிழமை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 276 மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை ஆட்சியர் ந.வெங்கடாச்சலம் வழங்கினார்.

       தேனி, என்.ஆர்.டி. மக்கள் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 276 மாற்றுத் திறனாளிகளுக்கு மொத்தம் ரூ.ஒரு கோடியே 69 லட்சத்து 37 ஆயிரத்து 570 மதிப்பில் 3 சக்கர மோட்டார் வாகனம், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, செயற்கை கால், காதொலி கருவி, ஊன்றுகோல் ஆகிய உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

     மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலி, மகளிர் திட்ட அலுவலர் உஷாதேவி, பெரியகுளம் சட்டப் பேரவை உறுப்பினர் ஏ.லாசர், மாவட்ட அதிமுக செயலர் டி.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai