சுடச்சுட

    

    அரசு பள்ளி அருகே தேங்கும் மழை நீர்: நோய் பரவும் அபாயம்

    By ஆண்டிபட்டி  |   Published on : 19th April 2015 01:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி அருகே சாலையில் தேங்கும் மழைநீரால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    மொட்டனூத்து ஊராட்சிக்கு உள்பட்ட ஆசாரிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. மழைக்காலத்தில் மழைநீர் வெளியேற வடிகால் வசதியில்லாததால் பள்ளி எதிரே உள்ள சாலையில்  மழை நீர் தேங்குகிறது. இதனால் மாணவ,மாணவிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தேங்கியுள்ள தண்ணீரில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி உள்ளது. இதனால் டெங்கு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. எனவே ஆசாரிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி எதிரே உள்ள சாலையில் மழைநீர் தேங்காமல் வெளியேற வடிகால் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai