உதவி உபகரணம் வழங்காததால் மாற்றுத் திறனாளி அவதி
By தேனி | Published on : 19th April 2015 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெரியகுளத்தைச் சேர்ந்த பட்டதாரியான மாற்றுத் திறனாளி, 3 சக்கர மோட்டார் வாகனம் கேட்டு தொடர்ந்து 5 ஆண்டுகளாக விண்ணப்பித்தும், வாகனம் வழங்கப்படாததால் சிரமத்திற்குள்ளாகி வருகிறார்.
தேனி பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முகமதுஇப்ராஹிம் மகன் முகமது யாசின்(39). பி.ஏ., மற்றும் கூட்டுறவு பட்டயப் படிப்பு படித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மூலம் மாதந்திர உதவித் தொகை பெற்று வரும் இவர், 3 சக்கர மோட்டார் வாகனம் பெறுவதற்கு 2011-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 6 முறை விண்ணப்பித்துள்ளாராம். வாகனம் வழங்குவதற்கு தன்னை 6 முறை நேர் காணலுக்கு அழைத்தும் இதுவரை வாகனம் வழங்கப்படவில்லை என்கிறார் முகமதுயாசின்.
இது குறித்து, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் துறை அலுவலர்களிடம் கேட்டதற்கு, தகுதியுள்ள மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றனர்.