சுடச்சுட

    

    சூறாவளிக் காற்றுடன் மழை: 50 ஏக்கர் முருங்கை மரங்கள் சாய்ந்தன

    By பெரியகுளம்  |   Published on : 19th April 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சூறாவளிக் காற்றுடன் பெய்த கனமழையால் 50 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன. 

    பெரியகுளத்தில் முதலக்கம்பட்டி, குள்ளப்புரம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் சுமார் 50 ஏக்கரில் முருங்கை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.  தற்போது அறுவைடயாகும் நிலையில் உள்ளது.

    இப்பகுதியில் விளையும் முருங்கைக்காய்கள் ஓட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் மூலம் மும்பை, கல்கத்தா ஆகிய வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு இப்பகுதியில் பலத்த சூறாவளிக் காற்றுடன்  கனமழை பெய்தது. இதில் 50 ஏக்கரில் பலன் தரும் நிலையில் இருந்த முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    இதன் சேதமதிப்பு பல லட்சம் எனக் கூறப்படுகிறது.  மழையால் சாய்ந்த முருங்கை மரங்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai