சுடச்சுட

  

  தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் செவிலியர் சங்க மாநில நிர்வாகிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது.

        தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட மூத்த செவிலியர் கண்காணிப்பாளர் கலாவதி தேர்தல் பணிகளை பார்வையிட்டார். தேர்தல் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. இத்தேர்தலில் 250 செவிலியர்கள் வாக்களித்தனர்.

    வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் சீலிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கு திங்கள்கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. ஏற்பாடுகளை தேனி மருத்துவக்கல்லூரி செவிலியர் சங்கத் தலைவர் சித்ரா, செயலர் ரஸீயா பசீரணி, பொருளாளர் நாகஜோதி மற்றும் மத்திய சங்க செயற்குழு உறுப்பினர் மகேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai