சுடச்சுட

    

    தேனி மாவட்டம், வருசநாடு அருகே சொத்துத் தகராறில் தாயைக்கொன்ற  மகனை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

    வருசநாடு அருகே வாலிப்பாறையைச் சேர்ந்தவர் அய்யம்மாள்(55). இவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவரது கடைசி மகன் ஜெயபாண்டி(34). இவர் கேரளாவில் கூலி வேலை பார்த்து வருகிறார். அய்யம்மாளிடம் சொத்தை பிரித்து தரும்படி தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில் சனிக்கிழமை காலை தகராறு முற்றியதில் அய்யம்மாளை கட்டையால் தாக்கியுள்ளார். இதில் அய்யம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வருசநாடு போலீஸார் வழக்குப் பதிந்து, ஜெயபாண்டியை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai