Enable Javscript for better performance
பாலக்கோம்பையில் \\\"அம்மா\\\' திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே பாலக்கோம்பையில் மூன்றாம் கட்ட அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

    முகாமிற்கு பாலக்கோம்பை ஊராட்சி மன்றத் தலைவர் வேல்.ஆண்டவர் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். சமூக நல வட்டாட்சியர் தானலிங்கம் முன்னிலை வகித்தார். பட்டா மாறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் முதியோர் ஓய்வூதியம், சாதிச் சான்றிதழ்கள் கோரி 105 மனுக்கள்  பெறப்பட்டன. இம்மனுக்கள் உடனடியாக ஆய்வு செய்யப்பட்டு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

     முகாமில் துணை வட்டாட்சியர் சுந்தர்லால், வருவாய் ஆய்வாளர் மகாலெட்சுமி, பாலக்கோம்பை விஏஓ முருகேசன், தெப்பம்பட்டி விஏஓ ஹரிஹரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai