Enable Javscript for better performance
வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏப்.21-இல் வருவாய் தீர்வாயம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏப்.21-இல் வருவாய் தீர்வாயம் தொடக்கம்

    By தேனி  |   Published on : 19th April 2015 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் ஏப்.21-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் தீர்வாயம்(ஜமாபந்தி) நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் தொடர்பான குறைபாடு, நிலுவையில் உள்ள மனுக்கள் ஆகியவற்றின் மீது தீர்வு காண்பதற்கு அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஏப்.21-ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் தீர்வாயம் நடைபெறுகிறது.

    தேனி:மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமையில் ஏப்.21-ஆம் தேதி ஊஞ்சாம்பட்டி, அல்லிநகரம், வீரபாண்டி, உப்பார்பட்டி ஆகிய கிராமங்களுக்கும், ஏப்.22-ஆம் தேதி கோட்டூர், சீலையம்பட்டி, கொடுவிலார்பட்டி, ஜங்கால்பட்டி, ஏப்.23-ஆம் தேதி பூமலைக்குண்டு, தப்புக்குண்டு, தாடிச்சேரி, கோவிந்தநகரம் ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறும்.

    போடி:  மாவட்ட வருவாய் அலுவலர் செ.பொன்னம்மாள் தலைமையில் ஏப்.21-ஆம் தேதி ராசிங்காபுரம், சிலமலை, போ.அம்மாபட்டி, ஏப்.22-ஆம் தேதி போ.மீனாட்சிபுரம், உப்புக்கோட்டை, பூதிப்புரம், கோடங்கிபட்டி, ஏப்.23-ஆம் தேதி போடி, டொம்புச்சேரி, கூழையனூர், மேலச்சொக்கநாதபுரம், போடி மேற்குமலை, ஏப்.28-ஆம் தேதி கொட்டகுடி, போடி வடக்குமலை, அகமலை.

    ஆண்டிபட்டி:  மாவட்ட கலால் துறை உதவி ஆணையர் தலைமையில் ஏப்.21-ஆம் தேதி கோவில்பட்டி, சண்முகசுந்தரபுரம், ஆண்டிபட்டி, ஏப்.22-ஆம் தேதி புள்ளிமான்கோம்பை, திம்மரசநாயக்கனூர், ஆண்டிபட்டி, ஏப்.23-ஆம் தேதி மொட்டனூத்து, ஜி.உசிலம்பட்டி, தேக்கம்பட்டி, மரிக்குண்டு, குன்னூர், வள்ளல்நதி ஆகிய கிராமங்களுக்கும், ஏப்.28-ஆம் தேதி கோத்தலூத்து, ராஜதானி, பழையகோட்டை, ராமகிருஷ்ணாபுரம், பாலகோம்பை, தெப்பம்பட்டி, சித்தார்பட்டி, கணவாய்பட்டி, ஏப்.29-ம் தேதி கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, மேகமலை.

    உத்தமபாளையம்: உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஏப்.21இல் பூலானந்தபுரம், சின்னமனூர், கருங்காட்டான்குளம், முத்துலாபுரம், சின்னஓவுலாபுரம், ஏப்.22-ஆம் தேதி தேவாரம், தேவாரம் மலை, தே.மீனாட்சிபுரம், பண்ணைப்புரம், பொட்டிப்புரம், சங்கராபுரம் ஆகிய கிராமங்களுக்கும், ஏப்.23 ஆம் தேதி க.புதுப்பட்டி, கம்பம், உத்தமபுரம், மேலக்கூடலூர், கீழக்கூடலூர், ஏப்.28-ஆம் தேதி அனுமந்தன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, காமயகவுண்டன்பட்டி, குச்சனூர், புலிகுத்தி, மார்க்கையன்கோட்டை, ஏப்.29-ஆம் தேதி வேப்பம்பட்டி, சீப்பாலகோட்டை, ஓடைப்பட்டி, அழகாபுரி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, எரசக்கநாயக்கனூர் மலை, ஏப்.30-ஆம் தேதி கோம்பை, மல்லிங்காபுரம், உத்தமபாளையம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி.

    பெரியகுளம்:  பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் ஏப்.21-ஆம் தேதி கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, தே.வாடிப்பட்டி, சில்வார்பட்டி, ஏப்.22-ஆம் தேதி ஜெயமங்கலம், மேல்மங்கலம், குள்ளப்புரம் ஆகிய கிராமங்களுக்கும், ஏப்.23-ஆம் தேதி வடகரை, தென்கரை, ஏப்.28-ஆம் தேதி ஏ.காமாட்சிபுரம், எண்டப்புளி, எ.புதுக்கோட்டை, தாமரைக்குளம், வடவீரநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களுக்கும் வருவாய் தீர்வாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai