சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தொடர்பு வசதிக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கி டாக்கி வழங்கப்பட உள்ளது.

  இதுகுறித்து தேனி வருவாய்த் துறை அதிகாரிகள் கூறியது: வருவாய்த் துறை அலுவலர்களுக்கு தகவல் தொடர்பு வசதிக்காக சி.யு.ஜி., இணைப்புடன் செல்போன்கள் வழங்கப்பட்டுள்ளன.

  இது தவிர வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் வாகனங்களில் வயர்லெஸ் தொலைபேசி பொருத்தப்பட்டுள்ளது.

   இந்த நிலையில், வருவாய்த் துறை அலுவலர்களிடையே தகவல் தொடர்பை மேம்படுத்துவதற்கு, ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்களுக்கு வாக்கி டாக்கி வழங்கப்பட உள்ளது.

  வாக்கி டாக்கி பயன்பாட்டுக்காக கம்பம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் உள்ள செல்லிடப்பேசி கோபுரத்துடன், தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புதிய  கோபுரம்

  அமைக்கப்பட்டுள்ளது என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai