Enable Javscript for better performance
வேலை உறுதித் திட்ட பயனாளிகளுக்கு சம்பள உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு இம்மாதம்(ஏப்ரல்) முதல் தினச் சம்பளம் ரூ.183 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட வேலை அளவின் அடைப்படையில் தினச் சம்பளமாக ரூ.167 வழங்கப்பட்டு வந்தது. அரசு உத்தரவின்படி, இம்மாதம் முதல் வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு தினச் சம்பளம் ரூ.183 ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது. வேலை உறுதியளிப்புத் திட்ட பயனாளிகளுக்கு வங்கி கணக்கு மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. பயனாளிகள் சம்பளம் பெற வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை எண்ணை இணைக்க வேண்டும் என்று ஊரக வளர்ச்சித் துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் இதுவரை 70 சதவிகிதம் பயனாளிகள் வங்கிக் கணக்குடன் ஆதார் அட்டை எண்ணை இணைத்து பதிவு செய்துள்ளனர் என்று ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai