சுடச்சுட

  

  தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட 20 ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைக்கு தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

  இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் முதல் கட்டமாக 20 ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில் வறுமை ஒழிப்பு சங்கம் மூலம், 150 வீடுகளுக்கு ஒருவர் வீதம் தூய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

   தூய்மைக் காவலர்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளில் குப்பை மற்றும் கழிவு நீர் அகற்றப்பட்டு மறு சுழற்சி செய்து வெளியேற்றப்படும். திடக் கழிவு மேலாண்மைக்காக ஊராட்சிகளில் உரக் கிடங்குகள் அமைக்கப்பட உள்ளன. தூய்மைக் காவலர்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் 100 நாட்களுக்கும், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எஞ்சிய நாட்களுக்கும் சம்பளம் வழங்கப்படும். ஊராட்சிகளில் துப்புரவு பணிக்காக ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் வழக்கம் போல பணியாற்றுவர்.

  திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவதற்கு 20 ஊராட்சிகளை தேர்வு செய்யும் பணி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் நடைபெற்று வருகிறது என்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai