Enable Javscript for better performance
ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஒட்டன்சத்திரம் தொகுதியில் அரசுக் கட்டடங்கள் திறப்பு

    By ஒட்டன்சத்திரம்  |   Published on : 20th April 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒட்டன்சத்திரம் தொகுதியில் கட்டப்பட்ட அரசுக் கட்டடங்களை முன்னாள் எம்பி என்.எஸ்.வி.சித்தன், அர.சக்கரபாணி எம்.எல்.ஏ ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தனர்.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதி வடகாடு ஊராட்சி கண்ணணூரில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன் 2013-2014 ஆண்டுக்கான தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் கட்டப்பட்ட சமுதாயக்கூடம் மற்றும் ஒட்டன்சத்திரம் சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம் கட்டப்பட்ட பொங்கல் மண்டபம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு வடகாடு ஊராட்சிமன்றத் தலைவர் கருப்புச்சாமி தலைமை வகித்தார். திமுக ஒன்றிய செயலர்கள் சோதீசுவரன், தர்மராஜன் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.எஸ்.வி.சித்தன், சட்டப்பேரவை உறுப்பினர் அர.சக்கரபாணி ஆகியோர் கலந்து கொண்டு சமுதாயக்கூடம் மற்றும் பொங்கல் மண்டபத்தை திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணைச்செயலர் ராஜாமணி, மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஹரிஹரசுதன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai