Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தேவையற்றது: அரசு அலுவலர் ஒன்றியம் கருத்து- Dinamani

சுடச்சுட

    

    சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தம் தேவையற்றது: அரசு அலுவலர் ஒன்றியம் கருத்து

    By தேனி,  |   Published on : 20th April 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சத்துணவு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தேவையற்றது என தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாநிலத் தலைவர் இரா.சண்முகராஜன் கூறினார்.

    தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில உயர்நிலைக் கூட்டம் தலைவர் இரா.சண்முகராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் பொன்.மணிமேகன், பொதுச் செயலர் ஆ.தேவந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத் தலைவர் எஸ்.சுருளியப்பன் வரவேற்றார்.

    கூட்டத்துக்குப் பின்பு செய்தியாளர்களிடம் இரா.சண்முகராஜன் கூறியது: தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில், தலைமைச் செயலக அலுவலர்கள் சங்கம் உள்ளிட்ட 6 அமைப்புகளை ஒருங்கிணைத்து கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

    இந்த கூட்டமைப்பின் சார்பில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர், ஊராட்சி துப்புரவு பணியாளர், குடிநீர் தொட்டி ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 50 கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் மே.4-ஆம் தேதி தமிழக முதல்வர் மற்றும் தலைமைச் செயலரிடம் மனு அளிக்கப்பட உள்ளது.

    சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு மூலம் 40 சதவிகிதம் வரை ஊதிய உயர்வு பரிந்துரைக்கப்படும் நிலை உள்ளது. அதே ஊதியத்தை காலமுறை ஊதியமாக அறிவிப்பதாக அமைச்சர் குழு உறுதியளித்தும், சத்துணவு ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது தேவையற்றது.

    கோரிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நடவடிக்கையை விடுத்து, குறிப்பிட்ட அரசியல் கட்சியின் தூண்டுதலில் சத்துணவு ஊழியர்கள் வீதிக்கு வந்து போராடுகின்றனர் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai