Enable Javscript for better performance
பெரியகுளம் அருகே கோஷ்டி மோதல்: 26 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    பெரியகுளம் அருகே கோஷ்டி மோதல்: 26 பேர் மீது வழக்கு

    By பெரியகுளம்,  |   Published on : 20th April 2015 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    பெரியகுளம் பட்டாளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அழகுமலை (25), சனிக்கிழமை இரவு வடுகபட்டி பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த, வடுகபட்டி வேளாளர் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் தரப்பினருக்கும், அழகுமலைக்கும் மோதல் ஏற்பட்டு கோஷ்டி மோதலாக மாறியது. சம்பவம் தொடர்பாக அழகுமலை கொடுத்த புகாரின் பேரில் செல்வராஜ், முரளி, பாலசுப்பிரமணி, சங்கரநாராயணன், இளமுருகன், மாசாணம், கதிரவன் ஆகிய 7 பேர் மீது தென்கரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வராஜ், பாலசுப்பிரமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    மற்றொரு தரப்பைச் சேர்ந்த ராஜா கொடுத்த புகாரின் பேரில் ஆண்டவர், கார்த்திக், அழகுமலை, ஒய்யணன், விருமாண்டி, வெளிச்சம், மகேந்திரன், நாகேந்திரன், மற்றொரு கார்த்திக் உள்பட 19 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் விடுதலை செய்யக்கோரி ஞாயிற்றுக்கிழமை காலை வடுகபட்டி பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதிகாரிகள் சமரச பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.

    அமைதிக் கூட்டம்

    சம்பவம் தொடர்பாக பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிக்குழுக் கூட்டம் வட்டாட்சியர் ஆர்.ரமேஷ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் கூடுதல் எஸ்.பி உமா, டி.எஸ்.பி.சேது மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஓரு தரப்பினர் கூட்டத்தை புறக்கணித்தனர். கூட்டத்தில் அமைதி நடவடிக்கைள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai