சுடச்சுட

    

    ஆதார் மையங்களில் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள்

    By ஆண்டிபட்டி  |   Published on : 21st April 2015 01:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க அலைக்கழிக்கப்படுவதால், கூடுதல் மையங்கள் அமைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

       ஆதார் அட்டை திட்டம் கடந்த 2010 ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் கண்ணின் கருவிழி, விரல் ரேகை போன்றவை பதிவு செய்யப்பட்டு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இந்த பணிகள் தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளன.  

         தற்போது முதியோர் உதவித்தொகை, தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றில் பயனடைய ஆதார் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதார் எண் வழங்கியவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் எரிவாயு உருளை வழங்கப்படுகிறது.

        இதனால் ஆதார் அட்டையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பொதுமக்கள் தற்போது ஆதார் மையங்களில் குவிந்து வருகின்றனர். ஆனால் கிராமப் பகுதிகளில் போதுமான ஆதார் மையங்கள் அமைக்கப்படாதது. ஆதார் ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராதது உள்ளிட்டக் காரணங்களால் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். பல இடங்களில் சாலை மறியல் போராட்டம், ஆதார் மையம் முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

    இதுகுறித்து ஆதார் அட்டை புகைப்பட நிறுவன மேலாளர் செல்வராஜ் கூறியது:

       தேனி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 5 தாலுகா அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஒன்று என மொத்தம் 12 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.  இதில் 24 பேர் பணியாற்றி வருகின்றனர். ஆதார் புகைப்படம் எடுக்க வருபவர்கள் 2010ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒப்புகைச் சீட்டு எடுத்து வரவேண்டும். அது இல்லாதவர்கள் குடும்ப அட்டை எடுத்து வரவேண்டும். இதனால் எங்களுக்கும், பொதுமக்களுக்கும் நேரம் மிச்சம்.

        மத்திய அரசு அனுமதித்துள்ள அளவின்படியே புகைப்பட மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கூடுதல் மையங்கள் அமைப்பதற்கு  அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்குரிய உத்தரவு வந்தவுடன் கூடுதல் மையங்கள் அமைக்கப்படும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai