Enable Javscript for better performance
உறவினரை தாக்கிய இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ஆண்டிபட்டி அருகே மேக்கிழார்பட்டியை சேர்ந்தவர்கள் மணிவேல்(26), வெள்ளையன்(32).  இருவரும் கோயமுத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துள்ளனர்.  அதே நிறுவனத்தில் முருகன்(39) என்பவரும்  பணிபுரிந்துள்ளார். சமீபத்தில் மணிவேல் வெள்ளையன் இருவரையும் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியுள்ளது.

         இதற்கு முருகன் தான் காரணம் என கூறி திங்கள்கிழமை மேக்கிழார்பட்டிக்கு வந்திருந்த முருகனை மணிவேல் மற்றும் வெள்ளையன் இருவரும் தாக்கியுள்ளனர்.  இதுகுறித்த புகாரின்பேரில் ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai