சுடச்சுட

  

  சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்து அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

  By தேனி  |   Published on : 21st April 2015 01:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சத்துணவு ஊழியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திங்கள்கிழமை அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

  தேனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க கிளைத் தலைவர் ஜியாஜூதீன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் ஞான.திருப்பதி, வெங்கட்ராமன், அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத்தலைவர் கே.துரைராஜ், பெரியசாமி, முருகன் உள்ளிட்டோர் சத்துணவு ஊழியர்களின் போராட்டத்தை ஆதரித்து பேசினர்.

      போடியில் கிளைத் தலைவர் குமுதாராணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்க மாவட்ட நிர்வாகிகள் ஆர்.கனகராஜ், உடையாளி, பள்ளி-கல்லூரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் எம்.பொன்னையா, அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்க மாவட்டத் தலைவர் கே.துரைராஜ், சத்துணவு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் பெ.பேயத்தேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     பெரியகுளத்தில் கிளை தலைவர் ராஜகோபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச்செயலாளர் முகம்மது அலி ஜின்னா பேசினார்.    ஆண்டிபட்டியில் கிளைத் தலைவர் முத்துப்பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட நிர்வாகிகள் சித்ரா, வரதராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

       உத்தமபாளையத்தில் கிளைத் தலைவர் சிவமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணமூர்த்தி, ஊரக வளர்ச்சி அலுவலர் சங்க மாவட்டச் செயலர் மு.இப்ராஹிம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  திண்டுக்கல்

   திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் முபாரக்அலி, சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் மரியபுஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சாலைப்பணியாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.ராஜமாணிக்கம், மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் விவேக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  பழனி

  ஒன்றியக்குழு அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் வேலுச்சாமி தலைமை வகித்தார்.  செயலர் ராமசாமி கோரிக்கைகளை விளக்கினார்.  ஊரக வளர்ச்சித்துறை மாவட்டத் தலைவர் ராஜசேகர், வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநில செயலர் மங்களபாண்டியன், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில செயலர் சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai