சுடச்சுட

  

  தந்தை இறந்த சோகத்தில் காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

  By ஆண்டிபட்டி  |   Published on : 21st April 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

     கண்டமனூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வம். இவரும் புதியமலர்(26) என்பவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதல் திருமணம் செய்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் புதியமலரின் தந்தை கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன் இறந்து விட்டாராம். இது புதியமலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்புதான் தெரிந்ததாம். இதனால் மனமுடைந்த புதியமலர் ஒரு வாரத்துக்கு முன் அரளி விதையை தின்று தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினாராம்.

    இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு புதியமலர் கணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கண்டமனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai