சுடச்சுட

    

    போடியில் கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட குழந்தைத் தொழிலாளர்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டனர்.

         போடி சுப்புராஜ் நகரில்  புதிய கட்டடத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேனி குழந்தைகள் உதவி மைய தொலைபேசி எண் 1098-க்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் கார்த்திக், சந்திரா ஆகியோர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    போடி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சகாதேவன், சிறப்பு சார்பு ஆய்வாளர் தர்மர் ஆகியோருடன் சைல்டு லைன் குழு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

    அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த தங்கபாண்டியன்-ஜெயந்தி தம்பதியரின் 9 வயது மற்றும் 11 வயது குழந்தைகள், ரமேஷ்-லட்சுமி தம்பதியரின் 13 வயது குழந்தை ஆகிய 3 குழந்தைகளை மீட்டனர்.

    மீட்கப்பட்ட குழந்தைகளை தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் ஸ்டெல்லா இப்ராஹிம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

     இதனையடுத்து கட்டட உரிமையாளர், குழந்தைகள், குழந்தைகளின் பெற்றோர் ஆகியோரை செவ்வாய்க்கிழமை (ஏப். 21) விசாரிக்க முடிவு செய்யப்பட்டு, தேனி மாவட்ட குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai