சுடச்சுட

    

    மதுவிலக்கு கோரி உண்ணாவிரதம்: மதுரை சட்டக் கல்லூரி மாணவி கைது

    By தேனி  |   Published on : 21st April 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி திங்கள்கிழமை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் உண்ணாவிரதம் தொடங்கிய சட்டக் கல்லூரி மாணவியை போலீஸார் கைது செய்தனர்.

        மதுரை சட்டக் கல்லூரி மாணவியும், மதுக் கடை ஒழிப்புக் குழு அமைப்பாளருமான ஆ.நந்தினி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்தார்.

     பின்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முன், தனது தந்தை ஆனந்தனுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.

        அனுமதியின்றி உண்ணாவிரதம் இருந்ததாக ஆ.நந்தினியை தேனி மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி கைது செய்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai