சுடச்சுட

    

    மேகமலையில் மழை: மூல வைகையில் நீர் வரத்து அதிகரிப்பு

    By ஆண்டிபட்டி  |   Published on : 21st April 2015 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருசநாடு அருகே மேகமலையில் மழை பெய்து வருவதால் மூல வைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

       மேகமலை மலைப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய மழை இல்லை. இதனால் மூல வைகையிலும் நீர்வரத்து இல்லாத நிலை ஏற்பட்டது. மழைக்காலத்திலும் கூட மூல வைகையில் குறைந்த நாள்களே நீர் வரத்து இருந்தது.

       இந்நிலையில் ஐந்து நாள்களாக மேகமலை பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகையாற்றில் நீர் வரத்து ஏற்பட்டு துரைச்சாமிபுரம் வரை நீர் வந்தடைந்துள்ளது. மேலும் மழை தொடர்ந்தால் மூல வைகை நீர் வைகை அணையை வந்தடையும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai