சுடச்சுட

  

  கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை வனப்பகுதியில் தமிழக வனத்துறையினரின் துப்பாக்கி சூட்டில் பலியான கூலித் தொழிலாளியின் குடும்பம், கடந்த 14 ஆண்டுகளாக இருளில் தவித்து வருவதாக அவரது மனைவி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளித்தார்.

      கூடலூரைச் சேர்ந்தவர் உடையன்(25). இவர், கடந்த 2000, அக்.15-ஆம் தேதி கூடலூர் அருகே வண்ணாத்திப்பாறை வனப் பகுதியில் அனுமதியின்றி மரம் வெட்டச் சென்ற போது, தமிழக வனத் துறையால் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் பலியான உடையான் குடும்பத்துக்கு, கூடலூர் நகராட்சி 13-ஆவது வார்டு எம்.ஜி.ஆர்.காலனியில்  1 சென்ட் பரப்பளவில் வீட்டடி மனையிடம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்துக்கு இதுவரை பட்டா வழங்கி வரி விதிப்பு செய்யவில்லை.

           இதில் உடையன் மனைவி செல்வி(36) வீடு கட்டி, தனது மகன் விஜயுடன் வசித்து வருகிறார். கடந்த 14 ஆண்டுகளாக இந்த வீட்டுக்கு பட்டா கோரியும், வீட்டு வரிவிதிப்பு கோரியும் நகராட்சி அலுவலகம், உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் வருவாய் தீர்வாயம் ஆகியவற்றில் செல்வி மனு அளித்துள்ளார்.         பட்டா இல்லாததால் வீட்டு வரி விதிப்பு செய்து மின் இணைப்பு பெற முடியாமல், கடந்த 14 ஆண்டுகளாக உடையான் குடும்பத்தினர் வீட்டில் இருளில் தவித்து வருகின்றனர்.

         இந்த நிலையில், தான் குடியிருக்கும் வீட்டுக்கு பட்டா வழங்கவும், வீட்டு வரிவிதிப்பு செய்யவும், மின் இணைப்பு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் ஆட்சியரிடம் செல்வி மனு அளித்தார். மனு மீது உரிய மேல்நடவடிக்கை எடுக்க உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai