சுடச்சுட

    

    முதல் திருமணத்தை மறைத்து இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.

    கம்பம் நந்தனார் காலனியைச் சேர்ந்தவர் பிரபா(21). இவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கம்பம் அரசு மருத்துவமனையில் உறவினர் சிகிச்சையின்போது உடனிருந்தாராம். அப்போது, அங்கு சிகிச்சை பெற வந்த கம்பத்தைச் சேர்ந்த அபுதாகீருடன்(32) காதல் ஏற்பட்டதாம். அபுதாகீர் முதல் திருமணத்தை மறைத்து பிரபாவுடன் பழகி வந்தாராம். தற்போது, பிரபா 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில் திருமணம் செய்ய சொல்லி அபுதாகீரிடம் கேட்டபோது மறுத்து, தாக்கியதாக தெற்கு போலீஸாரிடம் பிரபா புகார் அளித்துள்ளார். புகாரின் மீது போலீஸார் வழக்குப் பதிந்து அபுதாகீரை கைது செய்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai