சுடச்சுட

  

  தேனியில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தொடங்க கோரிக்கை

  By தேனி  |   Published on : 22nd April 2015 01:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தேனி அல்லிநகரத்தில் அரசு சார்பில் பெண்களுக்கு தனியாக மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என்று திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

          மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான எம்.வீரமணி அளித்த மனு:

      தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 750 மாணவர்கள், 500 மாணவிகள் உள்பட மொத்தம் 1,250 பேர் படித்து வருகின்றனர்.

   42 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். போதிய எண்ணிக்கையில் வகுப்பறை வசதியின்றி செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவ, மாணவிகள் இட நெருக்கடியில் சிரமப்பட்டு வருகின்றனர்.

        தேனியில் அரசு சார்பில் பெண்களுக்கு தனியாக மேல்நிலைப் பள்ளி இல்லாததால், தனியார் சுயநிதி பள்ளிகளில் கட்டணம் செலுத்தி மாணவிகளை சேர்க்க வேண்டியுள்ளது. தேனியில் அரசு சார்பில் செயல்பட்டு வரும் 5 விடுதிகளில் தங்கிப் படிக்கும் மாணவ, மாணவிகள் வெளியூர்களில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று படிக்க வேண்டியுள்ளது.

          மாணவ, மாணவிகள் நலன் கருதி தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், பெண்களுக்கு தனியாக மேல்நிலைப் பள்ளி தொடங்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai