சுடச்சுட

  

  தேனி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பி.எஸ்.என்.எல்.,பணியாளர்கள் சங்கங்களின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   பி.எஸ்.என்.எல்., சேவை விரிவாக்கத்துக்கு ஏற்ப நிதி மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் வழங்க வேண்டும், காலியாக உள்ள பி.எஸ்.என்.எல்.,இயக்குநர் பதவிகளை நிரப்ப வேண்டும், மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் பி.எஸ்.என்.எல்.,சேவை பெறுவதை கட்டயமாக்க வேண்டும், 4 ஜி சேவையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

  தேனி, பெரியகுளம், போடி, தேவாரம், லோயர்கேம்ப், கூடலூர், கம்பம், கோம்பை, பழனிசெட்டிபட்டி, சின்னமனூர், ஹைவேவிஸ், ஆண்டிபட்டி, ஜெயமங்கலம், தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, லட்சுமிபுரம் ஆகிய இடங்களில் உள்ள தொலைபேசி நிலையங்களில் பணியாற்றும் 22 பொறியாளர்கள், 130 ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமையும் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது.

  திண்டுக்கல்: திண்டுக்கல் கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு என்எப்டிஇ அமைப்பின் மாநிலத் துணைத் தலைவர் விஜயரங்கம் தலைமை வகித்தார்.  போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் கிளைச் செயலருமான ஜோதிநாதன் விளக்கவுரை நிகழ்த்தினார்.

  இந்த போராட்டத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றதால், துணைக் கோட்ட அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai