சுடச்சுட

  

  தேனி மாவட்டத்துக்கு உள்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் செவ்வாய்கிழமை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் மொத்தம் 796 பேர் மனு அளித்தனர்.

  தேனி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் தலைமை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.

  தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, உத்தமபாளையம் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற்ற வருவாய் தீர்வாயத்தில் முழு புலம் பட்டா மாறுதல் தொடர்பாக 318 பேர், உள்பிரிவு தொடர்பாக 161 பேர், நிலம் ஒப்படைப்பு தொடர்பாக 2 பேர், வீட்டுமனை பட்டா கோரி 115 பேர், சிட்டா மற்றும் பட்டா நகல் கோரி 15 பேர், அத்துமால் தொடர்பாக 3 பேர், ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து ஒருவர், மாதாந்திர உதவித் தொகை கோரி 88 பேர், திருமண உதவித் தொகை கோரி ஒருவர், கல்வி உதவித் தொகை கோரி 3 பேர், புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை நகல், குடும்ப அட்டை திருத்தப் பதிவு தொடர்பாக 15 பேர், வாரிசு சான்றிதழ் கோரி 2 பேர், இதர கோரிக்கைகள் குறித்து 71 பேர் உள்பட மொத்தம் 796 பேர் மனு அளித்தனர்.

  வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது ஒரு வாரத்துக்குள் தீர்வு ஏற்படுத்தப்படும் என்று ஆட்சியர் கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai