சுடச்சுட

  

  உத்தமபாளையத்தில் ஜமாபந்தி: பொதுமக்கள் அதிருப்தி

  By உத்தமபாளையம்  |   Published on : 23rd April 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய ஜமாபந்திக்கு போதுமான ஏற்பாடுகள் செய்யப்படாததால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

  உத்தமபாளையம் வட்டாரம், சின்னமனூர், கம்பம், கூடலூர் என 3 நகராட்சிகளும், க.புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், மார்க்கையன்கோட்டை, குச்சனூர், ஓடைப்பட்டி, கே.கே.பட்டி, ஹைவேவிஸ் என 11 பேரூராட்சிகளையும் கொண்ட 39 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது. இதனால் மாவட்டத்தில் பெரிய வட்டாரமாக உள்ளது.   ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் நடைபெறும் ஜமாபந்தியில், முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா என பல்வேறு உதவி கோரி தினமும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வருவார்கள். இதனால் பொதுமக்களின் வசதிக்காக நிழற்பந்தல், கூட்டத்தை தவிர்க்க கூடுதல் அலுவலர்கள் நியமனம் என சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். மேலும் மனுக்கள் அன்றைய தினமே விசாரிக்கப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும்.

  ஆனால் செவ்வாய்க்கிழமை உத்தமபாளையத்தில் தொடங்கிய ஜமாபந்தியில் எந்தவித சிறப்பு ஏற்பாடுகளும் இல்லை. இதுகுறித்து கோட்டாட்சியர் சுப்பு (பொறுப்பு) சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கேள்வி எழுப்பினார். வரும் நாள்களில் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார். தொடர்ந்து நடந்த ஜமாபந்தியில் பூலானந்தபுரம், முத்துலாபுரம், சின்னமனூர், கருங்கட்டான்குளம், சின்னஓவுலாபுரம் என 5 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் 84 மனுக்கள் பெறப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai