சுடச்சுட

    

    தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

    மாவட்ட ஆட்சியர் ந.வெங்கசடாசலம் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் முருகேசன், செயற்பொறியாளர் சங்கரஜோதி, மகளிர் திட்ட அலுவலர் உஷாதேவி, புதுவாழ்வு திட்ட மேலாளர் கழுகாசல மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மாவட்டத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து உள்ளாட்சி பிரநிதிகள், ஊராட்சி அளவிலான மகளிர் கூட்டமைப்பு நிர்வாகிகள், கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai