சுடச்சுட

    

    திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் வளர்ச்சி இல்லை: ஜி.கே.மணி

    By தேனி  |   Published on : 23rd April 2015 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக எந்த வளர்ச்சியும் இல்லை என்று தேனியில் புதன்கிழமை பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

     தேனியில் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாûஸ அறிவித்ததற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. பாமக தலைமையில் கூட்டணி சேரும் கட்சிகளுடன் இணைந்து சட்டப் பேரவை தேர்தலை சந்திக்கும் கருத்தில் எந்த மாற்றமுமில்லை.

      திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக எவ்வித வளர்சியும் இல்லை. இந்தக் கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்ததால் எங்களது வளர்ச்சியும் பாதிக்கப்பட்டது.

    தற்போதைய அதிமுக அரசு மக்கள் நலனில் அக்கறையில்லாத அரசாக உள்ளது.  நியூட்ரினோ ஆய்வக திட்டத்தை அரசு பொதுமக்களிடம் திணிக்கக் கூடாது. மீத்தேன் வாயு திட்டத்துக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பை பின்பற்றி பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீரை தேக்குவதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும். கௌரவக் கொலைகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai