சுடச்சுட

    

    தேனி அரசு மருத்துவ கல்லூரியில் மயக்கவியல் முதுகலை பட்டப்படிப்பு

    By ஆண்டிபட்டி  |   Published on : 23rd April 2015 03:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதுகலை பட்டமேற்படிப்பு தொடங்க அனுமதியளிப்பது குறித்து தமிழ்நாடு எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழக குழுவின் தலைவர் ஜெயபாஸ்கரன் மற்றும் உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கொண்ட குழு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டது.

       இது குறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.எம்.ராஜாமுத்தையா கூறியதாவது: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது மயக்கவியல் துறையில் முதுகலை மருத்துவ பட்டமேற்படிப்பு தொடங்க 6 இடங்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டது. இதனை ஆய்வு செய்த தமிழக அரசு அந்த படிப்பை விரைவில் தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

     இங்கு நாளுக்கு நாள் அறுவை சிகிச்சை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முதுகலை பட்டமேற்படிப்பு தொடங்கப்பட்டால் நோயாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மேலும் பொதுமருத்துவம், பொது அறுவை சிகிச்சை மற்றும் மூட நீக்கியல் மருத்துவ அறுவை சிகிச்சை போன்ற துறைகளில் முதுகலை மருத்துவ பட்டமேற்படிப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai