நாளை அம்மா திட்ட முகாம்
By தேனி | Published on : 23rd April 2015 03:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
தேனி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஏப்.24) அம்மா திட்டத்தின் கீழ் 3 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது.
இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: பெரியகுளம் வட்டாரம் ஏ.காமட்சிபுரம், ஆண்டிபட்டி வட்டாரம் கணவாய்பட்டி, உத்தமபாளையம் வட்டாரம் கீழக்கூடலூர் ஆகிய இடங்களில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு அம்மா திட்டத்தின் கீழ் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பட்டா மாறுதல், பிறப்பு, இறப்பு, வருவாய், இருப்பிடம், ஜாதி மற்றும் வாரிசு சான்று, அரசு நலத் திட்ட உதவி, புதிய குடும்ப அட்டை, குடும்ப அட்டை திருத்தப் பதிவு, உழவர் பாதுகாப்பு அட்டை, கிராமத்தில் உள்ள பொதுவான பிரச்னை குறித்து மனு அளித்து தீர்வு காணலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.