சுடச்சுட

  

  தேனி மாவட்டம் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா புதன்கிழமை கம்பம் நடுதலுடன் தொடங்கியது.

   சித்திரை திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வாஸ்து சாந்தி, கம்பம் கொண்டு வருதல், அம்மன் கரகத்துடன் கோயில் வீட்டில் இருந்து எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

  கண்ணீஸ்வரமுடையார் கோயில் முல்லைப் பெரியாற்றில் இருந்து புதன்கிழமை கோயிலுக்கு கம்பம் கொண்டு வருதல், கம்பத்துக்கு மாற்று விரித்தல், சிறப்பு அபிஷேகம், கங்கணம் பூணுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோயிலில் ஈஸ்வரமூர்த்தியாக விளக்கம் கம்பத்துக்கு பரிவட்ட பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தர்கள் கம்பத்துக்கு மஞ்சள் நீருற்றி வலம் வந்து வணங்கினர். வியாழக்கிழமை (ஏப்.23) முதல் மே 11ஆம் தேதி வரை அம்மன் வீதி உலா மற்றும் மண்டகப்படி நடைபெறுகிறது.

  பெருந்திருவிழா: மே 12ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை  சித்திரை பெருந்திருவிழா நடைபெறும். மே 12ஆம் தேதி கோயில் வீட்டில் இருந்து கோயிலுக்கு திருவாபரணப் பெட்டி கொண்டு வருதல், அம்மன் ஊருக்குள் இருந்து கோயிலுக்கு பவனி வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். மே 13ஆம் தேதி முத்துப் பல்லக்கிலும், 14ஆம் தேதி புஷ்ப பல்லக்கிலும் அம்மன் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். 15ஆம் தேதி தேரோட்டம் நடைபெறும். 18ஆம் தேதி தேர் நிலைக்கு வருதல், கம்பம் நிலை பெயர்த்தல், முத்துச்சப்பரத்தில் அம்மன் திருத்தேர் தடம் பார்த்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும். 19ஆம்தேதி ஊர் பொங்கலுடன் விழா நிறைவடைகிறது.

    திருவிழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு அடிப்படை தேவையான வசதிகள், போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்து அறநிலையத் துறை கோயில் நிர்வாகம், வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகம், பொது சுகாதாரத் துறை, அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் மாவட்ட காவல் துறை ஆகியவை செய்து வருகின்றன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai