சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை

    By ஆண்டிபட்டி  |   Published on : 24th April 2015 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆண்டிபட்டியில் வாங்கிய பணத்தை திருப்பித் தராததால், வியாழக்கிழமை இளம்பெண் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.

      ஆண்டிப்பட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சூரியகுமாரி (36), அதே பகுதியைச் சேர்ந்த குணசேகரன் என்பவரிம் ரூ. 17 லட்சம் கடனாகப் பெற்றிருந்தாராம். பணத்தை பலமுறை திரும்பக் கேட்டும், அவர் தராததால், குணசேகரன் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

      இந்நிலையில், ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள தனது அக்கா ஜீவா என்பவரது வீட்டுக்கு சூரியகுமாரி சென்றுள்ளார். பின்னர், இருவரும் வியாழக்கிழமை இரவு ஆண்டிபட்டி பாலவிநாயகர் கோயில் எதிரே உள்ள கடையில் ஜாதகம் பார்ப்பதற்காகச் சென்றுள்ளனர்.

     அப்போது, அவரை பின்தொடர்ந்து வந்த குணசேகரன், தான் கொண்டு வந்திருந்த கத்தியால் சூரியகுமாரியை சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில், அவர் கீழே சரிந்து விழுந்தார். உடனே, அவரை ஜீவா ஆட்டோவில் ஏற்றி, தனியார் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றுள்ளார். ஆனால், வழியிலேயே சூரியகுமாரி உயிரிழந்தார்.

      அவரது உடலை போலீஸார் கைப்பற்றி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து, ஆண்டிபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து, குணசேகரனை தேடி வருகின்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai