சுடச்சுட

  

  இடைநின்ற மாணவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை

  By ஆண்டிபட்டி  |   Published on : 24th April 2015 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டி அருகே டி.ராஜகோபாலன்பட்டியில் இடைநின்ற பள்ளி மாணவர்களை புதன்கிழமை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

   இங்கு வறுமையின் காரணமாக மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாக கூறப்பட்டதையடுத்து கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயலெட்சுமி மற்றும் எஸ்.எஸ்.ஏ. வட்டார மேற்பார்வையாளர் ராஜலெட்சுமி, பயிற்றுநர் முத்துராஜ், தகவல் மற்றும் ஆவண அலுவலர் சசிகலா மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளி தலைமை ஆசிரியர் ஊமைத்துரை ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

   அப்போது 5 பேர் பள்ளி செல்லாமல் இருப்பது கண்டறியப்பட்டு ராஜகோபாலன்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தேனி மாவட்ட அளவில் ஏப். 10ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 359 இடைநின்ற மாணவ, மாணவிகளை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai