சுடச்சுட

  

  கண்ணகி கோயில் விழாவில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்க தடை

  By தேனி  |   Published on : 24th April 2015 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழாவில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் செய்ய, மாவட்ட ஆட்சியர் ந. வெங்கடாசலம் தடை விதித்துள்ளார்.

     தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பௌர்ணமி விழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், ஆட்சியர் கூறியது: தேனி மாவட்டம், கூடலூர் அருகே தமிழக-கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் மே 4 ஆம் தேதி நடைபெறும் சித்திரா பௌர்ணமி விழாவுக்கு, பக்தர்கள் குமுளியில் இருந்து கோயிலுக்குச் சென்று வர போக்குவரத்து வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கோயில் பகுதியில் குடிநீர், கழிப்பிடம் மற்றும் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    இதை முன்னிட்டு, கண்ணகி கோயில் வனப் பகுதிக்குள் அதிக சப்தம் எழும்பக் கூடிய ஒலிபெருக்கி, ஜெனரேட்டர், பட்டாசு ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது. வனப் பகுதிக்குள் சிலைகளை கொண்டு செல்லவும், தமிழ், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட எந்த மொழியிலும் துண்டுப்பிரசுரங்களை விநியோகம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கோயில் வளாகம் மற்றும் வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது. வனப் பகுதிக்குள் இரு சக்கர வானங்களில் செல்லவும், மது பாட்டில்கள் கொண்டு செல்லவும், புகைப்படம் மற்றும் விடியோ எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில் வளாகம் மற்றும் வனப் பகுதியில் முடி காணிக்கை செலுத்தக் கூடாது என்றார்.

    இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெ. மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் செ. பொன்னம்மாள், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஜானகி, வருவாய் கோட்டாட்சியர்கள் சுப்பு, சேகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai