சுடச்சுட

    

    கம்பத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் லாரியுடன் பறிமுதல்

    By கம்பம்  |   Published on : 24th April 2015 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தடைசெய்யப்பட்ட புகையிலை பண்டல்களை, கம்பம் தனிப்பிரிவு போலீஸார் வியாழக்கிழமை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.

       பான்பராக், போதை தரும் புகையிலை வகைகளை, தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை காலை பெங்களூரில் இருந்து கம்பத்துக்கு லாரியில் தடைசெய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

      அதன்படி, எஸ்.பி. தனிப்பிரிவு சார்பு-ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார், குமுளி சாலையில் வடக்குக் காவல் நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 25 பண்டல்கள் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

      அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், லாரியுடன் வடக்குக் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். பின்னர், பிடிபட்ட லாரி மற்றும் புகையிலை பண்டல்களை, தேனி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி மீனாட்சிசுந்தரத்திடம் போலீஸார் ஒப்படைத்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai