Enable Javscript for better performance
கேரளத்துக்கு கடத்திய 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்துக்கு கடத்திய 1000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: ஒருவர் கைது

    By உத்தமபாளையம்  |   Published on : 24th April 2015 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம் கூடலூர் அருகே வியாழக்கிழமை கேரளத்துக்கு 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை போலீஸார் கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

     தேனி மாவட்டத்தில் இருந்து கேரளத்துக்கு செல்லும் போடிமெட்டு, கம்பம் மெட்டு, குமுளி வழியாக ரேஷன் அரிசி கடத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கிய ரேஷன் அரிசிக்கு கேரளத்தில் நல்ல விலை கிடைக்கிறது. கூடுதல் விலை கிடைப்பதால் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தொடர்ந்து அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.

     இந்நிலையில்,வட்ட வழங்கல் உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு ஆய்வாளர் குமரேசன், வட்டவழங்கல் பறக்கும் படை துணை வட்டாட்சியர் நசீர் ஆகியோர் கூடலூர் அடுத்த லோயர் கேம்பில் வியாழக்கிழமை வாகனசோதனை நடத்தினர். அப்போது கேரளத்தை நோக்கிச் சென்ற மினி வேனில் காமயகவுண்டன்பட்டியைச் சேர்ந்த பழனிபொம்மு மகன் விஸ்வநாதன்(34), 50 சிறிய மூட்டைகளில் 1000 கிலோ ரேஷன் அரிசி கடத்தியது  கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீஸார் விஸ்வநாதனை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனையும் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai