சுடச்சுட

  

  தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டியைச் சேர்ந்த மாயாண்டி. இவரிடம், உத்தமபாளையத்தைச் சேர்ந்த முகமதுகனி மகன் ஜாபர் சாதிக் என்பவர் ரூ.  3 லட்சம் கடனாகப் பெற்றாராம். அதனை, மாயாண்டி திரும்ப கேட்டுள்ளார். அதற்கு, ஜாபர் சாதிக் ரூ. 3 லட்சத்துக்கான காசோலை கொடுத்துள்ளார்.

    ஆனால், அவரது வங்கிக் கணக்கில் பணம் இல்லாததால், காசோலை திருப்பி அனுப்பப்பட்டது. இதனால், ஜாபர் சாதிக் தன்னை ஏமாற்றிவிட்டதாக, உத்தமபாளையம் குற்றவியல் நீதிமன்றத்தில் மாயாண்டி வழக்குத் தொடர்ந்தார்.

    புதன்கிழமை இவ்வழக்கை விசாரணை செய்த நீதிபதி கீதா, ஜாபர் சாதிக்குக்கு 3 மாத சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai