Enable Javscript for better performance
தனியார் பேருந்து மோதியதில் முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பழனி அருகே தனியார் பேருந்து மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவர் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தார்.

       பழனி அருகே விருப்பாட்சியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (60). இவர், பழனி-திண்டுக்கல் சாலையில் விருப்பாட்சி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த தனியார் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்தார்.

      உடனடியாக, பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி புதன்கிழமை உயிரிழந்தார்.

      இது குறித்து, அவரது மகன் சரவணன் (32) கொடுத்த புகாரின்பேரில், சத்திரப்பட்டி போலீஸார் பேருந்தை ஓட்டி வந்த திண்டுக்கல் சிக்கனன் மகன் சுப்பிரமணி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai