சுடச்சுட

    

    பெரியகுளத்தில் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தம்

    By தேனி  |   Published on : 24th April 2015 01:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரையில் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்துக்கான ஏற்பாட்டை, சைல்டு-லைன் அமைப்பினர் வியாழக்கிழமை தடுத்து நிறுத்தினர்.

       வடகரையைச் சேர்ந்த நாகராஜ் என்பவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 36 வயது நபருக்கு இரண்டாவதாக திருமணம் செய்து கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்துள்ளன. இதை, 1098 என்ற சைல்டு-லைன் அமைப்புக்குரிய   எண்ணுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

      அதன்பேரில், சைல்டு-லைன் ஒருங்கிணைப்பாளர் தன்ராஜ் தலைமையில், அலுவலர்கள் ராஜா மற்றும் விஜயலெட்சுமி, குழந்தைகள் நலப் பாதுகாப்பு குழு உறுப்பினர் மாரிமுத்து ஆகியோர் அடங்கிய குழு, அப்பகுதிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டது.

      பின்னர், அச்சிறுமி மற்றும் பெற்றோர்கள் வியாழக்கிழமை குழுந்தைகள் நலப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராயினர். அவர்களிடம், பெண்ணுக்குரிய வயது வந்த பின்னர் திருமணம் நடத்திக் கொள்வது என எழுதி வாங்கி அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai