சுடச்சுட

  

  பெரியகுளம் பாலசுப்பிரமணிய சுவாமி கோயில் திருப்பணிகள்:  தமிழக முதல்வர் பார்வையிட்டார்

  By பெரியகுளம்  |   Published on : 24th April 2015 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெரியகுளம் பகுதியில் பழமையும் பிரசித்தியும் பெற்ற அருள்மிகு பாலசுப்பிரணிய சுவாமி திருக்கோயிலில் ரூ. 4 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

    சோழர் காலத்தில் கட்டப்பட்ட இக் கோயிலில் ரூ. 2 கோடியில் ராஜகோபுரம் அமைக்கவும், மீதமுள்ள ரூ. 2 கோடியில் புதிதாக தளம் அமைத்தல், வாகன மண்டபம் அமைத்தல் உள்பட பல்வேறு வகையான புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    தனது சொந்த ஊரான பெரியகுளத்துக்கு புதன்கிழமை இரவு வருகை தந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள அவரது இல்லத்தில் தங்கினார்.        பின்னர், வியாழக்கிழமை காலை அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலுக்குச் சென்று, அங்கு நடைபெற்று வரும் திருப்பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து, கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

    முன்னதாக, தனது இல்லத்தில் பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார். மேலும், கட்சி நிர்வாகிகளையும் சந்தித்தார்.

    முதல்வருடன், மாவட்ட அதிமுக செயலர் டி. சிவக்குமார், மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலர் ஓ.பி. ரவீந்திரநாத்குமார், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் எம். செல்லமுத்து, நல்லாசிரியர் ஆர். வைகுண்டம், பொதுக்குழு உறுப்பினர் ஆர். ராஜகுரு, வடுகை ஜெ. பேரவைச் செயலர் பாலமுருகன், தாமரைக்குளம் பேரூராட்சி துணைத் தலைவர் சி. சந்தோசம், நகரச் செயலர் என்.வி. ராதா, துணைச் செயலர் எம். அப்துல் சமது உள்பட பலர் இருந்தனர்.

    முதல்வரின் வருகையையொட்டி, பெரியகுளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai