Enable Javscript for better performance
பைக் மோதியதில் நடந்து சென்ற இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தேனி அருகே கோடாங்கிபட்டியில் வியாழக்கிழமை இரு சக்கர வாகனம் மோதியதில், நடந்து சென்றவர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

       போடி, விசுவாசபுரத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ராமு அண்ணாமலை (35). இவர், இரு சக்கர வாகனத்தில் தேனியில் இருந்து போடி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, கோடாங்கிபட்டியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் சதீஷ்குமார் (29) என்பவர் மீது இரு சக்கர வாகனம் மோதியது. இதில், ராமு அண்ணாமலை கீழே விழுந்ததில் தலையில் காயமடைந்து உயிரிழந்தார். இரு சக்கர வாகனத்தில் வந்த சதீஷ்குமாரும் காயமடைந்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

      இந்த விபத்து குறித்து, பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai