Enable Javscript for better performance
வைகை அணை அருகே லாரி-பைக் மோதல்: ஒருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தேனி மாவட்டம், வைகை அணை அருகே லாரியும், இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார்.

      ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியைச் சேர்ந்த கருத்தசாமி (38) மற்றும்  வேல்முருகன். இவர்கள் இருவரும் புதன்கிழமை இரவு வைகை அணை சாலையில் தேனி குடிநீர்த் திட்ட சுத்திகரிப்பு நிலையம் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிரே வந்த லாரி இவர்கள் மீது மோதியதில், இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

      உடனே, அருகிலிருந்தவர்கள் இருவரையும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு கருத்தசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேல்முருகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

      இச்சம்பவம் குறித்து, க.விலக்கு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai