சுடச்சுட

    

    கம்பத்தில் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டவர் சனிக்கிழமை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

         கம்பம், அரசு கள்ளர் பள்ளித் தெருவைச் சேர்ந்தவர் அழகுத்தேவன்(57). இவரை கடந்த ஏப்.5-ஆம் தேதி கம்பத்தில் கஞ்சா விற்றதாக கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸார் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கஞ்சா கடத்தல், விற்பனை தொடர்பான பல்வேறு வழக்குகளில் தொடர்புடையை அழகுத்தேவனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ் பரிந்துரை செய்தார்.  இதை ஏற்று ஆட்சியர் அளித்த உத்தரவின் பேரில், அழகுத்தேவன் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai