சுடச்சுட

    

    சின்னமனூரில் போலி ஆவணம் தயாரித்து குடும்பச் சொத்தை அபகரிக்க முயன்றதாக 3 பேர் மீது சனிக்கிழமை மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

       சின்னமனூர், விஸ்வங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மனைவி சாந்தி. சின்னமனூரில் உள்ள தனது குடும்ப பூர்வீக சொத்துக்களான வீடு மற்றும் நிலத்தை, தனது சகோதரர்கள் சின்னமனூரைச் சேர்ந்த முருகேசன், கருப்பையா மற்றும் தேனியைச் சேர்ந்த மாடசாமி மகன் அசோகன் ஆகியோர் போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்துள்ளதாகவும், ஆவணங்களை பெயர் மாற்றம் செய்ய சின்னமனூர் சார்-பதிவாளர் அலுவலக நிர்வாகம், பத்திர எழுத்தர், உத்தமபாளையம் வருவாய் துறை, சின்னமனூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் மின் வாரியம் உடந்தையாக இருந்ததாகவும் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சாந்தி புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

        உயர்நீதிமன்றக் கிளை உத்தரவின் பேரில் முருகேசன், கருப்பையா, மாடசாமி ஆகியோர் மீது தேனி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai