சுடச்சுட

    

    ஆண்டிபட்டியில் கைத்தறி மற்றும் விசைத்தறி உரிமையாளர்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

    முகாமுக்கு மதுரை உதவி அமலாக்க அலுவலர் செல்வன் முன்னிலை வகித்தார். சென்னை மண்டல அமலாக்க அலுவலர் ஆறுமுகம் தலைமை வகித்துப் பேசியது:  கைத்தறி ரக ஒதுக்கீட்டு சட்டத்தின்படி கைத்தறி வேஷ்டி, சேலை, துண்டு, லுங்கி உள்பட 11 ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்ய தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறி இந்த ரகங்களை உற்பத்தி செய்பவர்களுக்கு ஆறுமாதம் சிறைத் தண்டனையோ அல்லது தறி ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ. 5000 அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்தோ நீதிமன்றத்தால் தண்டனை வழங்க இயலும். எனவே தேனி மாவட்டத்தில் உள்ள விசைத்தறியாளர்கள் கைத்தறிக்கு பிரத்யேகமாக ஒதுக்கப்பட்ட  ரகங்களை உற்பத்தி செய்ய வேண்டாம் என்றார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான விசைத்தறி மற்றும் கைத்தறி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai