சுடச்சுட

    

    தேனி மாவட்டத்தில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து

    By தேனி  |   Published on : 26th April 2015 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.    சோத்துப்பாறையில் சனிக்கிழமை அதிக அளவில் 124 மி.மீ.,மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் கொட்டக்குடி ஆறு, முல்லைப் பெரியாறு மற்றும் ஓடைகளில் நீர்வரத்து உள்ளது. தேனியில் மீருசமுத்திரம் கண்மாய் நிரம்பி மறுகால் பாய்கிறது.

          மழையளவு(மி.மீ.,): பெரியகுளம்- 55, ஆண்டிபட்டி-2.8, தேனி-35.6, வீரபாண்டி- 74, போடி- 29.6, மஞ்சளார்- 15, உத்தமபாளையம்- 7, வைகை அணை- 7.2, கூடலூர்- 32, பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு- 4.8, தேக்கடி- 5.8.

           அணைகளில் நீர்மட்டம்: வைகை அணை நீர்மட்டம் 38.8 அடி. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 118 கன அடி. அணையில் இருந்து விநாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.      மஞ்சளார் அணை நீர்மட்டம் 36.30 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 66 கன அடி. சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 119.72 கன அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 110 கன அடி.

          முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 113.30 அடி. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 583 கன அடி. அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு விநாடிக்கு 150 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai