சுடச்சுட

    

    பெரியகுளத்தில் பாதாள சாக்கடைப்பணி தொடக்கம்

    By பெரியகுளம்  |   Published on : 26th April 2015 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியகுளத்தில் ரூ.26.60 கோடியில் பாதாளச் சாக்கடை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

    நகர்மன்றத் தலைவர் ஓ.ராஜா இப்பணியை தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் ஏ.லாசர் எம்.எல்.ஏ, நகராட்சி ஆணையர் ஏ.மங்கையர்கரசி, பொறியாளர் வி.சுப்பிரமணியன், உதவிப்பொறியாளர் சக்திவேல், ஓவர்சீயர் மலர்கொடி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிக் கோட்டப் பொறியாளர் எம்.ரகுபதி, உதவிப் பொறியாளர் வி.மனோகரன், நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இத்திட்டத்தில், கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், புனரமைப்பு குழாய்கள் அமைத்தல், நீருந்து குழாய்கள் அமைத்தல் மற்றும் சாலைகள் சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai