சுடச்சுட

  

  வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் முருங்கை இலைப்பொடி

  By ஆண்டிபட்டி  |   Published on : 26th April 2015 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆண்டிபட்டி பகுதியில் முருங்கை இலையில் இருந்து மூலிகை தயாரிப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

     ஆண்டிபட்டியில் புள்ளிமான்கோம்பை, பாலக்கோம்பை, கன்னியப்பபிள்ளைபட்டி, தெப்பம்பட்டி, கண்டமனூர் மற்றும் கடமலைக்குண்டு பகுதிகளில் சுமார் 1000 ஹெக்டேருக்கும் மேல் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.  இங்கிருந்து பல மாநிலங்களுக்கும் முருங்கைகாய்கள் அனுப்பப்படுகின்றன. முருங்கைகாய்கள் தவிர முருங்கைக் கீரையும் தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. தற்போது முருங்கை இலைகளை காயவைத்து விற்பனை செய்யவும் தொடங்கியுள்ளனர்.

  இதுகுறித்து கடமலைக்குண்டு விவசாயி ராமலிங்கம் கூறியது:

   முன்பு முருங்கைக்காய் சீசனில் மட்டுமே வருவாயும் வேலையும் இருக்கும். ஆனால் தற்போது சீசன் இல்லாத நாள்களில் முருங்கைக் கீரையை பறித்து அவற்றை காயவைத்து கிலோ ரூ.100க்கு விற்கிறோம். இவற்றை வியாபாரிகள் வாங்கி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர்.

   வெளிநாடுகளில் முருங்கை மரங்கள் இல்லையென்பதால் இரும்புச் சத்து தேவைக்காக முருங்கை இலைப்பொடியை உட்கொள்கின்றனர்.

    இதனால் இதற்கு நல்ல கிராக்கி உள்ளது. எனவே இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கைக்காய் மற்றும் இலைகளில் மருந்து மற்றும் உணவு பொருள்கள் தயாரிப்பது, ஏற்றுமதி செய்வது குறித்து பயிற்சி தர வேளாண்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai